• Sep 21 2024

விடுதலை படத்தில் மிரட்டிய வாத்தியார் கதாபாத்திரம் உண்மையில் யார் தெரியுமா ? அவரது மகன் அளித்த சுவாரஸ்ய பேட்டி!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநராக இருந்து வருபவர்  வெற்றிமாறன். இவர் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் அவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தில் சூரி காவலராகவும், விஜய் சேதுபதி வாத்தியார் பெருமாள் கதாபாத்திரத்திலும் நடித்திருகிறார். இந்த நிலையில் வாத்தியார் பெருமாள் கதாபாத்திரம் என்னுடைய அப்பாதான் என்று புலவர் கலியபெருமாள் அவர்களின் மகன் சோழன் நம்பியார் சமிபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.

அந்த நேர்காணலில் தன்னுடைய தந்தை பற்றியும், படத்தில் வந்துள்ள தன்னுடைய தந்தையின் கதாபாத்திரம் பற்றியும் பேசியிருந்தார். அவர் கூறுகையில் “விடுதலை படத்தில் வாத்தியார் பெருமாள் என்று இருக்கிறது. என்னுடைய அப்பா வாத்தியார் கலியபெருமாள். வெற்றிமாறன் அல்லது அவரது துணை இயக்குநர்களில் யாரோஒருவர் என்னுடைய அப்பாவின் “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்ற புத்தகத்தை படித்திருக்கின்றனர்.

வெற்றிமாறனிடம் பேசும் போது நான் அந்த புத்தகத்தை கொடுத்தேன் அவரும் நான் படித்துவீட்டேன் என்று கூறினார். அதோடு படம் எடுப்பதற்கு முன்னர் எனக்கு உங்களுடைய தந்தையை பற்றி எனக்கு தெரியும் என்று மட்டும்தான் சொல்லியிருகிறார். அதை தவிர நான் படத்தில் அந்த கதாபாத்திரத்தை வைக்க போகிறேன் என்று சொல்லவில்லை. ஆனால் அவர் அந்த கதாபாத்திரத்தை வைத்த காரணம் அவரை அந்த புத்தகம் பாதித்திருக்கிறது.

அவர் சொல்லியிருக்கும் கதையில் சரியாக அந்த கதாபாத்திரம் இருக்கிறதா? என்றால் கிடையாது. ஆனால் மக்களுக்கு உதவ வேண்டும் என கலியபெருமாள் இருந்தார், அதே போல அதற்காக மக்கள் அவரை காட்டிக்கொடுக்கவில்லை என்ற அடிப்படை கருத்தை சரியாக வைத்திருக்கிறார். ஆனால் சில கொடூரமான காட்சிகள் வருகின்றது. படத்தில் காவல் துறையில் உள்ள கொடூரம் பற்றி காட்டியிருக்கின்றனர். எனவே அந்த கதாபாத்திரத்திற்கும் அந்த காட்சியால் வேண்டும் என்பதினால் சினிமா என்பதினாலும் அதனை தவிர்க்க முடியவில்லை.

இருந்தபோலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாறு 20 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் போன்றவற்றை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் இருப்பதினால் உலக அளவில் இருக்கும் தமிழ் இளைஞர்கள்  மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அவைகளை போலவே காவல் துறைக்குளேயே இருக்கும் அடக்குமுறைகள் பற்றியும் அவர் காட்டியிருக்கிறார். நடிகர் சூரி நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு தேசிய அளவில் விருது கிடைக்க கூட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அணைத்து விஷயங்ககளையும் வைக்கவில்லை அதற்கு காரணம் சினிமாவை பலர் பார்ப்பார்கள் என்பதினால், சென்சார் போர்டுக்கு சென்றால் அதனை நீக்கி விடுவார்கள் என்பதிலினாலும் தான் அதனை வெற்றிமாறன் வைக்கவில்லை. சில காட்சிகளை உண்மையாகவும் வைத்திருக்கிறார் என்று தன்னுடைய தந்தை பற்றியும் அவருக்கும் இந்த படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் பற்றியும் பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் புலவர் கலியபெருமாள் அவர்களின் மகன் சோழன் நம்பியார்.


Advertisement

Advertisement