தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கின் மத்தியில் நேற்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் மாமன்னன் . இப்படத்தில் உதயநிதியுடன் வடிவேலுவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமரை்சனங்களையும் பெற்று வருகின்றது
இப் படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரம் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபால் தான் என ஒரு கூட்டம் கருத்துக்களை போட்டு வருகிறது. இதில், ஒரு படி மேலே சென்று தனபாலே இது எல்லாம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த பெருமை என கொண்டாட்ட மனநிலைக்கே வந்து விட்டார். அப்போது, தனபாலை அடக்கி ஒடுக்கியதாக காட்டப்படும் அந்த ஆதிக்க சாதி மனநிலை கொண்ட மாவட்ட செயலாளர் யார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
"தனபால்தான் மாமன்னன் என்று முடிவெடுத்த ஊடகங்கள் அவர் அங்கே இருந்த காலத்தில் அந்த மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதையும் பதிவு செய்து, எடப்பாடி அவர்களையும் பேட்டி எடுத்து 'நீங்க இப்படிதான் நாயெல்லாம் அடிச்சு கொன்னீங்களா என்று கேட்க முன்வரவேண்டும்." என அதிஷா என்பவர் ட்வீட் போட்டுள்ளார்.
அந்த ட்வீட்டையே தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ஸ்மைலி எமோஜி ஒன்றையும் போட்டு சிரித்து வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது என்னப்பா செம பொலிடிக்கல் கேமா இருக்கே என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. பகத் ஃபாசிலின் ரத்தின வேல் பெயரில் வேல் உள்ளது. அதே போல பழனி முருகரின் அடையாளம் வேல் என்றும் பழனிச்சாமி என்கிற பெயரை குறிக்கத்தான் ரத்தின வேல் என்கிற பெயரையே மாரி செல்வராஜ் வைத்துள்ளதாக சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!