• Sep 20 2024

'மோதலும் காதலும்' சீரியல் நடிகர் விக்ரம் யார் தெரியுமா..? இவருக்கு ஒரு மகனும் இருக்காரா..? இதோ பலருக்கும் தெரிந்திடாத உண்மைகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சீரியல் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மோதலும் காதலும் .இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து ரொம்ப சுவாரஸ்யமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்து வருபவர்களுக்கென்று ரசிகர் பட்டாளமும் உருவாகி வருகிறது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் விக்ரம் பற்றி தெரியாததை தெரிந்து கொள்வோம்.


மோதலும் காதலும் விக்ரமின் உண்மையான பெயர்  சமீர் அகமது. இவர் டிசம்பர் 4, 1994 -இல் பிறந்தவர் . இவருடைய சொந்த ஊர் கோவை மாவட்டம் தமிழ்நாடு. சமீர் ஒரு நடிகர் மட்டும் இல்லாமல் மிகவும் அழகான  மாடல், பாடி பில்டர். அவர் எம்ஆர் தமிழ்நாடு வேர்ல்ட் வைட் 2019 வெற்றியாளர் ஆவார். தர்ஷினி கவுடாவுடன் இணைந்து சில்லுனு ஒரு காதல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.


மொடலிங்கில் ஆர்வம் காட்டி பல அவோட்களை வென்றிருந்தாலும் , மறுபுறம் குடும்பம் தொழிலையும் செய்து வருகிறார். சீரியலை பார்த்த பிறகு இவருக்கென்று ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறார்கள். இவருக்கு திருமணம் ஆகி ஒரு அழகான மகனும் இருக்கிறார். 


தற்போது விஜய் டிவி சீரியல் மோதலும் காதலும் தொடரில் மனைவியை பிரிந்து ஒரு பெண்  குழந்தைக்கு தந்தையாக இருக்கும் அப்பா கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடிக்கிறார். இவரின் அழகு ,நடிப்பு, தோற்றம் எல்லாம் வைத்து இவரை ஒரு திரைப்பட நடிகராக பார்க்க ரசிகர்கள் விரும்புகின்றனர்.


Advertisement

Advertisement