• Sep 20 2024

'சுறா' பட வில்லனின் மனைவியா இது... அவங்க யார் தெரியுமா.. இதோ நீங்களே பாருங்க ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தேவ் கில். இவர் ஒரு பொழுது போக்கு சூழலின் வாயிலாக தான் நடிகராக அறிமுகமானார். அந்தவகையில் 'ஷாஹீத் இஅசாம்' என்பது தான் இவரின் முதல் படம். இவ்வ்வாறாக முதலில் ஹிந்தி படங்களில் நடித்துப் புகழ் பெற்று அதன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானவர். 


அந்த வகையில் இவரின் முதல் தமிழ்ப் படமாக 'மாவீரன்' என்ற திரைப்படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த சுறா படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகின்ற ஒருவராகவே விளங்குகின்றார்.


தனது அறிமுகப் படத்திலேயே தேவ் கில் பல்வேறு அனுபவங்களை பெறுகிறார். இதன் காரணமாக நடிப்பின் வித்தையை அறிந்து கொண்டு ஹிந்தியில் லாட்ஸிக், சோனு சூட் மற்றும் ராஜஜுட்ஷி போன்ற பல நடிகர்களுடன் ஒத்துழை பல படங்களில் நடித்தார். 

இவ்வாறாக தமிழ், மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு திரைப்படமான மகதீராவிலும் நடித்துள்ளார். இப்படம் வெளியானதும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான பல விமர்சனங்களைப் பெற்றது. இதனால் அந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்படமாக இப்படம் மாற முடிந்தது.


பல படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 'லிங்கா' படத்திலும் பணியாற்றினார். அதில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


இவ்வாறாக வில்லன் நடிகராக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட தேவ் கில்லின் உடைய மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement