• Nov 15 2024

குப்புறப் படுத்திருக்கும் இந்தக் குட்டிக் குழந்தை யார் தெரியுமா..? இப்பவும் அதே சிரிப்புடன் இருக்கும் பிரபல நடிகை தான்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நஸ்ரியா நசீம். அந்தவகையில் மலையாளத் திரைப்படங்களில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் பின்னர் தமிழிலும் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார். 


இவரின் கியூட்டான அழகிற்கும், குழந்தைத்தனமான நடிப்பிற்கும் என்றே இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இவ்வாறாக பல படங்களிலும் நடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மனதில் குடி கொண்ட இவர் மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசில் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  


திருமணத்தை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்ட நஸ்ரியா தனது பொழுதைக் கழிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் எப்போதும் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். 


இந்நிலையில் தற்போது இவரின் சிறுவயதுப் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement