• Sep 21 2024

கமலுக்கு 32 நாட்களாக மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்த முதல் இயக்குநர் யார் தெரியுமா-குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அந்தவகையில் தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் பகத் பாசில், சூர்யா ,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன்தாஸ் என பல முக்கிய நடிகர்கள் நடித்து உள்ளது பெரும் ஆராவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகலாவியரீதியில் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மேலும் இப் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒருவாரமே எஞ்சியுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் விக்ரம் படம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் ஒரு சூப்பர் மேட்டர் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கமல் சார் தானே மேக்கப் போட்டுக் கொள்வார். இந்த படத்திற்கு நான் உங்களுக்கு மேக்கப் போடவா என்று கேட்டேன். சாரும் சரி என்றார். மேலும் நான் போட்ட மேக்கப்பும் கமல் சாருக்கு பிடித்திருந்தது என்றார்.

மேலும் கமல் ஹாசன் சாருக்கு 32 நாட்களாக மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்த முதல் இயக்குநர் நான் தான் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தரமாக படம் எடுக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்தால், இந்த லோகேஷ் கைவசம் இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா என ரசிகர்கள் வியக்கிறார்கள். மேலும் லோகேஷுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement