• Nov 14 2024

பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

மேலும் இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகியுள்ளது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல முறை முயற்சி செய்து வந்தார் மணிரத்னம்.

சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

எனினும் தற்போது தன்னுடைய நீண்ட கனவு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் மணிரத்தினம்.பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகின்றது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது.

மேலும் இப் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் டீசரில் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் சீனுக்கு நல்ல ரீச் கிடைத்து இருக்கிறது.

த்ரிஷா நடித்திருக்கும் குந்தவை ரோல் வாய்ப்பு முதலில் சென்றது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தான். அவர் அந்த நேரத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்தார். அதனால் பொன்னியின் செல்வன் வேண்டாம் என நிராகரித்து விட்டார்.

அண்ணாத்த படம் பெரிய வரவேற்பது பெறாத நிலையில் தற்போது PS-1 டீஸர் பார்த்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.மேலும் இப்படி ஒரு படத்தை மிஸ் செய்துவிட்டாரே என்றும் விமர்சித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement