• Sep 20 2024

இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள புதிய படத்தின் கதாநாயகி யார் தெரியுமா- அடடே இவர் அஜித்துடன் நடிச்சவராச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பேசக்கூடிய படங்களில் ஒன்றாக உள்ளதால், இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனை வைத்தே இரண்டாம் பாகம் எடுக்க முற்பட்டார் இயக்குநர் ஷங்கர். 

அதன்படி தற்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகம் நடைபெற்று வருகின்றது.அதன் படி இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க கமிட் ஆனார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திர கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ், ஜெயப்ரகாஷ் போன்ற பலர் நடித்து வருகிறார்கள்.


இதனை அடுத்து 36 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் மணிரத்னத்துடன் கூட்டணி அமைத்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாரா மற்றும் த்ரிஷாவின் பெயர் அடிபட்டது.


இந்நிலையில் தற்போது கமலின் 234 படத்தில் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து இன்னும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement