• Sep 20 2024

ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேரனாக நடிக்கப்போவது யார் தெரியுமா..? இந்த சுட்டிப் பையனா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் நான்கு நடிகர்கள் யார் யார் என்பதை படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.

 நடகர் ரஜினிகாந்தின் 169 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  ஆகஸ்ட் 22 ஆம் தேதி, வெளியிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதை அறிவித்தது படக்குழு. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த படத்தில், 'எந்திரன்' படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தீயாயக பரவி இருந்தாலும், இதுகுறித்து தற்போது வரை, உறுதியான தகவல் வெளியாகவில்லை.

ஆனால் நடிகை ரம்யா கிருஷ்ணன், காமெடி நடிகர் யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன், மற்றும் தரமணி நடிகர் வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளனர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்த தகவலை 'ஜெயிலர்' படத்தை தயாரிக்கும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அத்தோடு  மற்ற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படம், 2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் குறித்து பல விஷயங்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது இப்படத்தில் இணைந்துள்ள குழந்தை நட்சத்திரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. 


ஆம், யூடியூப் மூலம் பிரபலமான rithu rocks ரித்விக் இப்படத்தில் இணைந்திருக்கிறார். மேலும் அவர் இப்படத்தில் ரஜினியின் பேரனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 

Advertisement

Advertisement