• Sep 20 2024

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே யாருடைய படத்தில் நடிக்கிறார் தெரியுமா?- அட இவர் சூப்பர் நடிகராச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புக் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியதோடு அங்கு முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார்.

அந்த வகையில் இவர் இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். முகமூடி படம் போலவே பீஸ்ட் படமும் நெகட்டிவ் விமர்சனங்களை தான் அதிகம் பெற்று இருக்கிறது. இருப்பினும் அதை எல்லாம் தாண்டி 250 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து இருக்கிறது.

தொடர்ந்து பூஜா நடிப்பில் வெளியாகிய ராதே ஷியாம், பீஸ்ட், ஆச்சார்யா என தோல்வியை சந்தித்து வருவதால் அவரது மார்க்கெட் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் அடுத்து பூஜா ஹெக்டே விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக JGM படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/oUsJh-6BVx0

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement