• Nov 11 2024

வெற்றிமாறன் போடும் அடுத்த மாஸ்டர் பிளான்... யாரின் கதையை படமாக்க இருக்கின்றார் தெரியுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியாகின்ற படங்களினை எதிர்பார்த்து காத்திருக்கின்ற ரசிகர்கள் கூட்டமோ ஏராளம். அந்தளவிற்கு வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவராக விளங்கி வருகின்றார். 


அந்தவகையில் இவரின் இயக்கத்தில் உருவான 'படிக்காதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன்' என அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டானமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரின் இயக்கத்தில் தற்போது 'விடுதலை' என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படமானது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இப்படத்தில்  காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவரோடு இணைந்து விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜீவ் மேனன் என மிகப்பெரிய திரைப் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

மேலும் இளையராஜா இசையமைப்பதோடு வேல்ராஜ் ஒளிப்பதிவும் செய்கிறார். இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் இரண்டு பாகங்களாக இப்படத்தை வெளியிட உள்ளனர்.

அதுமட்டுமல்லாது சூர்யா நடிப்பில் உருவாக  உள்ள 'வாடிவாசல்' என்ற படத்தையும் கைவசம் வைத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். அதாவது சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக கொண்டே இப்படத்தை இயக்கவுள்ளார்.

அத்தோடு இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கின்றார். 

விடுதலை படம் முடிந்த கையோடு இப்படத்தின் பணிகளை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார் வெற்றிமாறன். இப்படங்களோடு இணைந்து 'வடசென்னை 2' மற்றும் வெப் தொடர் ஒன்றையும் தன்னுடைய கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு பல வழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றார் வெற்றி.


இந்நிலையில் இவர் தற்போது மேலும் ஒரு கதையை இயக்க ஆர்வம் காட்டி வருவதாக  தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது தமிழகத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கரின் வாழ்க்கைக் கதையினை மையமாக வைத்து படம் ஒன்றினை எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

எனினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. எனவே இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பினை சற்று பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement