தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் த்ரிஷா. இவர் தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் சோலோ ஹுரோயினாக நடித்து வருகின்றார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக ராங்கி என்னும் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது எனலாம்.
இதை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. மேலும் இன்று தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என தகவல் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை த்ரிஷா கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் எப்படி இத்தனை ஆண்டுகளாக ஒரே மாதிரி ஸ்லிம்மாக இருக்கீங்க என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் இந்த கேள்விக்கு என்னிடம் சரியான பதில் இல்லை. குடும்ப ஜீன் என்று சொல்லலாம். வேற என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எப்போதுமே என்னை நான் மகிழ்ச்சியாக வைத்து கொள்கிறேன் ' என்று கூறியுள்ளார் த்ரிஷா. இதுவே அவர் ஸ்லிம்மாக இருக்க காரணமாம் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Listen News!