பாலிவுட்டின் முக்கிய நட்ச்சத்திரமாக திகழ்பவர் கரண் ஜோஹர்.இவரது காபி வித் கரண் ஷோ 7வது சீசன் தற்போது ஒளிபரப்பி வருகிறது. இதில் பிரபல பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருவார்கள்.அது ரசிகர்களிடத்தே பரவி வரும்.
இவ்வாறுஇருக்கையில் இவரது தற்போதைய எபிசோடில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் மற்றும் வருண் தவான் பங்கேற்று பல விஷயங்களை கூறியுள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், டிவி ஆங்கர் என பன்முகத் திறமையுடன் வலம் வந்துக் கொண்டிருப்பவர் கரண் ஜோகர்.மேலும் இவர் பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் படங்களை தயாரித்து வருகின்றார். அத்தோடு பாலிவுட்டில் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசனை தற்போது இவர் தொகுத்து வழங்கி வருகின்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சி பாலிவுட்டில் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு , கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பிரபல நடிகை சமந்தா மற்றும் அக்ஷய் குமார் கலந்துக் கொண்டனர்.
இந்த எபிசோட் மிகவும் அதிகமான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. அத்தோடு இருவரும் இணைந்து புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அக்ஷய், சமந்தாவை கைகளில் தூக்கிக் கொண்டு வந்ததும் ரசிக்களை கவர்ந்தது.
இதனிடையே இந்த வார எபிசோடில் பிரபல ஜக்ஜக் ஜியோ படத்தின் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் வருண் தவான் இணைந்துள்ளனர்.மேலும் இந்தப் பிரமோவில் அனில் கபூரிடம் கரண் ஜோஹர் ஒரு கேள்வியை கேட்கிறார். அவரை இளமையாக உணர வைக்கும் மூன்று விஷயங்களை சொல்லுமாறு அவர் தன்னுடைய கேள்வியை கேட்கிறார்.
கரண் ஜோஹரின் கேள்விக்கு உடனடியாக பதிலளித்த அனில் கபூர், செக்ஸ், செக்ஸ், செக்ஸ் என்று சொல்கிறார். இதனால் கரண் ஜோஹர் மட்டுமின்றி, உடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வருண் தவானும் அதிர்ச்சியடைகின்றனர். தொடர்ந்து இருவரும் பல கேள்விகளுக்கு தங்களுடைய சுவாரஸ்யங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர உள்ளதாக ப்ரமோவில் காணப்படுகிறது.
அத்தோடு பாலிவுட்டின் மிகவும் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் கடந்த 6 சீசன்களும் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிலையில் தற்போது சீசன் 7 நிகழ்ச்சி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 10 எபிசோட்களை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பியுள்ளது.
Listen News!