• Nov 14 2024

இளையராஜா ஏன் திமிராக இருக்கிறார் தெரியுமா? மனம் திறந்த கவிஞர் சினேகன்..! அட இது தெரியாம போச்சே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

70 களின் காலகட்டத்தில் மேற்கத்திய இசை மேலோங்கி இருந்த காலத்தில், கிராமங்கள் தோறும் ஆங்கிரமித்து இருந்து ஆர்டி பர்மனின் இசை.தமிழ் இசையே அழிந்துவிடுமோ என்ற பயத்தை போக்கி, தமிழ் இசையை மீட்டு எடுத்த பொக்கிஷம் தான் இளையராஜா.இசைஞானி இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

 பாடலாசிரியர் சினேகன்,இளையராஜா குறித்து பேசியிருந்தார். அதாவது இளையராஜா கோவக்காரர், திமிர் பிடித்தவர் என்று எல்லாம் சொல்லப்படுகிறது. அவருடன் இணைந்து நான் பல பாடல் எழுதி இருக்கிறேன் உண்மையில் அவர் குழந்தை மனம் கொண்டவர். அனைவர் இடத்திலும் அழகாக பேசுவார். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் வேறுவிதமாக பேசும் குணம் இல்லாதவர்.

அவருக்கு தவறு மனதில் பட்டுவிட்டால், முகத்திற்கு நேராக குறையை சொல்லிவிடுவார். இதனால் எதிரில் இருப்பவரின் மனம் பாதிக்கும். ஆனால், அதைப்பற்றி யோசிக்காமல் மனதில் பட்டத்தை பேசுவததால், இவரை பலருக்கும் பிடிக்காது. அனைவருக்கும் பிடித்தவர்கள் போல கடவுளால் கூட இருக்க முடியாது. ஏன் என்றால் கடவுள் எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

திமிராக இருக்கிறார்? அவருடன் நெருங்கி பழகிய பிறகுதான் கோபுரமாக தெரிந்தவர், எனக்கு குழந்தையாக தெரிந்தார். அதையும் மீறி இவர் கோவப்படுகிறார் என்றால், எங்கோ ஓர் இடத்தில் அவமானத்தாலும், கோவத்தாலும், ரணத்தாலும் பாதிக்கப்பட்டதன் வெளிப்பாடு, ஏதாவது ஒரு இடத்தில் வெளிப்படத்தான் செய்யும். மனதில் எழும் கோவங்களையோ, அவமானத்தையோ நாம் மண்ணில் புதைக்கவில்லை மனதில் புதைத்து இருப்பதால் அது அவ்வப்போது வெளிவரத்தான் செய்யும். இது அவரிடம் வெளிப்படுவதில் தவறு இல்லை என்று தான் சொல்கிறேன் என்று பேசி இருந்தார்  சினேகன்.


Advertisement

Advertisement