• Sep 21 2024

ஸ்ருதிஹாசன் தனது அப்பாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நேற்றைய தினம் தனது 68வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி இருந்தார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தனர்.

மேலும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு பார்ட்டி ஒன்றும் நடைபெற்றது. இந்த பார்ட்டியில் பிரலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதே போல இவரது இளைய மகளான அக்ஷராவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இது குறித்த வீடியோக்களும் வைரலானது.


ஆனால்,ஸ்ருதி ஹாசன் இந்த பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ருதி தனது காதலருடன் மும்பையில் லிவ்விங் டு கெதர் உறவு முறையில் இருந்து வருகிறார். இதனால், எந்த காரணத்திற்காகவும் அவர் சென்னைக்கு வருவதே இல்லை. 


அப்பாவின் பிறந்த நாளுக்காவது நேரில் வந்து வாழ்த்து கூறி இருக்கலாம் என நெட்டிசன்கள் கோபமாக கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement