95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது.இதில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார்.
இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருது பெற்றார். விருதுவென்ற இசையமைப்பாளர் கீரவாணி ராஜமௌலிக்கு பாட்டு பாடி நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், ஆஸ்கர் விழாவில் ராஜமௌலிக்கு கடைசி இருக்கை வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுடன் ஒருவரை அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த விழாவில் ராஜமௌலி மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டார்கள்.
மூன்று ஆயிரத்திற்கும் அதிகமானோர் அமரக்கூடிய டால்பி தியேட்டரில் இவர்களுக்கு கடைசி இருக்கை கொடுத்தது ஏன் என ரசிகர்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். ஆனால் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் அவர்கள் மேடைக்கு அருகில் அமர்ந்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!