• Nov 17 2024

மகனை கையில் தூக்கிக்கொண்டு யாருடன் போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா ..? நம்ம கேப்டன் விஜயகாந்த்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் உள்ளார்.தொடர்ந்து தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள்போன்ற திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி முன்னணி நடிகராக சினிமாவில் கலக்கினார்.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து தேமுதிக எனும் கட்சியைத் தொடங்கினார். சினிமாவைப் போல் அரசியலிலும் அசுர வளர்ச்சி கண்ட விஜயகாந்த், குறுகிய காலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகும் அளவுக்கு உயர்ந்தார்.

இதன் பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சினிமாவிலும், அரசியலிலும் இருந்து விலகியே இருந்து வருகிறார் விஜயகாந்த். இதனால் இவரது மனைவி பிரேமலதா கட்சியை கவனித்து வருகிறார். நடிகர் விஜயகாந்துக்கு விஜய பிரபாகர், சண்முக பாண்டியன் என இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள்.

மேலும் இதில் மூத்த மகனான விஜய் பிரபாகரன், பேட்மிண்டன் அணி ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் தனது மகனை தூக்கி வைத்துக்கொண்டு மனைவி பிரேமலதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Advertisement