சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான படங்களை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவ்வாறான படங்களில் ஒன்று தான் 'படிக்காதவன்'.
இப்படத்தில் குட்டி ரஜினி ஆக வந்த சிறுவனை யராலும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது . இவர் ரஜினி மட்டுமில்லாது கமல், விஜயகாந்த், பிரபு, அமிதாப்பச்சன் எனப் பல பிரபலங்களுடனும் இணைந்து மொத்தம் 200 இற்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
ஆம் அந்த நடிகர் வேறு யாருமில்லை. மாஸ்டர் சுரேஷ் தான். இவர் முதன் முதலில் 1985-ஆம் ஆண்டு பாலிவுட்டில் தான் அறிமுகமானார் . அதிலும் அமிதாப்பச்சன் உடன் இணைந்து நடித்த படத்தில் பட்டையை கிளப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் நடித்த அந்த ஒரு படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் அதிகமாக நடித்து வந்தார். அந்த வகையில் பாக்யராஜ் நடித்த 'மௌனகீதங்கள்' படத்தில் அவரின் மகனாக நடித்திருந்தார். அந்த சின்ன வயதிலேயே அப்படி ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி குழந்தை நட்சத்திரமாக பல விருதுகளை பெற்றார் .
இந்த மாஸ்டர் சுரேஷ் வேறு யாரும் இல்லை. இப்போது பிரபலமாக இருக்கும் தெலுங்கு இயக்குநர் சூரிய கிரன் தான். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தன்னுடைய கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். அதனைத் தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு தெலுங்கில் 'சத்யம்' என்னும் படத்தை இயக்கினார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அதுமட்டுமல்லாது நாகார்ஜுனா தொகு த்து வழங்கிய பிக்பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார் சூரிய கிரன். மேலும் இவர் பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதாவின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரும் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இப்போது விஜய் டீவியில் ஒளிபரப்பாகின்ற பிரபல சீரியலான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இல் நடித்துக் கொண்டிருக்கிறார் .
சூரிய கிரண் 'சமுத்திரம், புன்னகை பூவே' திரைப்படத்தில் நடித்த காவேரி என்னும் கல்யாணியை திரும ணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர்.
சினிமாவைப் பொறுத்தவரையில் சிறுவயதில் சினிமாவில் நடித்த பின்பு பலர் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் இவர் தற்போதும் படங்களை இயக்கி சினிமாவில் இருந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!