நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் தன்னுடைய கட்சியை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றி இருந்தார். இதை தொடர்ந்து வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக தான் போட்டியிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அதிமுகவுடன் அவர் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர் கட்சியில் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் கட்சி தரப்பில் அறிக்கையொன்று வெளியானது.
குறித்த அறிக்கை வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் கண்ணதாசன் கூறுகையில், சென்னை வளசரவாக்கத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசரக் கூட்டம் பொதுச்செயலாளர் கண்ணதாசன் எனது தலைமையில் கூட்டப்பட்டது. இதில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது பேட்டி அளித்த மன்சூர் அலிகான், உங்களுக்கு பிச்சை வேணும்னா பாக்கெட்டில் இருப்பது 500 ரூபாய்தான் என இழிவாகப் பேசி உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதன்படி அவரிடம், திமுகவில் மறுபடியும் கதிரானந்தம் நிறுத்தப்படலாம் என்ன பேசப்படுகிறது இதில் உங்களின் கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்ட போது, அது அவங்க பிரச்சினை. இங்கு நான் தான் எம்பி. மக்களுக்கு நான் வேண்டுமா அவங்கள் வேண்டுமா? நான் உங்களுக்கு வேலைக்காரனா இருந்து வேலை பார்ப்பேன். அவங்க முதலாளியா இருந்து உங்களுக்கு பிச்சை போடுவாங்க. பிச்சை வேணும்னா அவங்களை தேர்ந்தெடுங்க. உங்களுக்காக பாராளுமன்றத்தில் அடித்து பிடித்து எல்லாத்தையும் வாங்கணும், தண்ணி பஞ்சத்தை போகணும், சுத்தி பசுமையான சூழலை உருவாக்கணும் என்பது தான் எனது திட்டம்.
மேலும் பேக்கெட்டுல வைக்கவே பணம் இல்லை. என் பேக்கெட்டுல 500 ரூபா தான் இருக்கு. ஆனா சிலர் லோகார்ல ஒழிச்சு வச்சு இருக்காங்க. நான் நிக்கிறதால மக்களுக்கு ஒரு லட்சம் கொடுக்கப்படுமா? அப்படி கொடுத்தா வாங்கிக் கொள்ளுங்க.. நான் மக்களுக்காக தான் உழைக்க வந்துட்டேன். கடுமையாக உழைக்க தயார் ஆகிட்டேன் என கூறியுள்ளார்.
Listen News!