• Sep 21 2024

கெட்ட வார்த்தை பாடி தான் உங்க வாழ்க்கைய நடத்தணுமா ?சூப்பர் சிங்கர் பைனல் குறித்து ஜேம்ஸ் வசந்தன் அதிரடி பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் இந்த நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து 8வது சீசன் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்ச்சிக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து உள்ளார்.

அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா ஆகிய 5 பேரும் இந்த இறுதிச் சுற்று போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். 8வது சீசன் இன் வின்னர் மக்களது வோட்டையும் நடுவர்களது மார்க்கையும் வைத்தே தெரிவுசெய்யப்பட்டனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக கிரிஷாங் வின் பண்ணியுள்ளார். இவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்துள்ளது. ரிஹானா இரண்டாவது பரிசை வென்றுள்ளார். இவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கேஷ் ப்ரைஸ் கிடைத்தது. மக்களுடைய ஓட்டை மட்டும் பார்த்தால் ரிஹானா முதலிடத்தை பெற்றுள்ளார். மூன்றாவது பரிசினை நேஹா வென்றுள்ளார். இவருக்கு மூன்று லட்சம் ரூபாய் கேஷ் பிரைஸ் கிடைத்துள்ளது. நடுவர்களுடைய மார்க்கை பார்த்தால் நேஹா 1st பிளேஸில் உள்ளார்.

மொத்தமாக ஐந்து பேருக்கும் சேர்த்து ஒரு கோடி மக்களுக்கும் மேல் வோட் பண்ணி உள்ளனர். கிரிஷாங் கிராண்ட் பினாலே இல் கடவுள் அமைத்து வைத்த பாடலை பாடினார். மற்றும் இதன் இரண்டாவதாக வந்த ரிஹானா அனிருத் இசையமைப்பில் வெளிவந்த "கருத்தவன்லாம் கலிஜா" என்ற பாடலை பாடியுள்ளார்.

ரிஹானாவின் பாடல் குறித்து ஜேம்ஸ் வசந்தன் என்பவர் தன்னுடைய ஆதங்கத்தை பத்துவிட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்தப் பாடலில் இடம்பெற்ற கெட்ட வார்த்தையை எப்படி ஒரு குழந்தையை பாட வைக்கலாம் என்று பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் தற்செயலாகக் டிவி பார்த்தேன். விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் ஃபினாலே லைவ் போய்க்கொண்டிருக்கிறது ஒரு எட்டு வயது பெண் குழந்தை "கருத்தவன்லாம் கலிஜாம்" பாட்டையும் முழு ஈடுபாட்டுடன் பாடிக் கொண்டிருக்கிறது. பாடலில் வருகின்ற தக்காளி என்கின்ற வார்த்தையை அந்தப் பாடலைப் போலவே அழுத்தமாக சத்தமிட்டு சொல்கிறது கள்ளமறியா அந்த பிஞ்சு உதடுகள். எனக்கு திக்கென்றது. அது ஒரு கேவலமான கெட்ட வார்த்தையில் இணைச்சொல் என்பது ஆண்கள் எல்லோருக்கும் தெரியும்.

அந்த சொல்லை பாடினால் ஊர் திட்டும், சென்சார் பிரச்சனைகள் வரும் அதனால் அதேபோலவே ஒலிக்கிற இந்த சொல்லை சொல்லி மகிழ்கின்ற உயரிய சிந்தனை உடைய பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், நடிகரும் சமூக பங்களிப்பு இது. ஒரு புறம். ஆனால், இந்த பாடலையும் அந்த குறிப்பிட்ட சொல்லையும் அந்த குழந்தைக்கு அட்சரம் பிசகாமல் சொல்லிக் கொடுத்த பெற்றோரையும், ஆசிரியரையும், நிகழ்ச்சி தயாரிப்பு குழுவினரையும் தமிழ்ச்சமூகம் காலத்துக்கும் வாழ்த்தவேண்டும்.

கெட்டவார்த்தைகளை பாடித்தான் உங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலையில் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் என்றால் அதற்கான தளத்தை தேர்ந்தெடுங்கள். ஆண்களுக்கு மட்டும் பெரியவர்களுக்கு மட்டும் என்பது போன்ற எச்சரிக்கையுடன் வெளியிடுங்கள். அதற்குப் பிறகு அதை பயனாளரின் பொறுப்பு இப்படி குழந்தைகளும் கேட்கிற, பாடுகிற வெகுஜன ஊடகமான சினிமா பாடல்களுக்கு நஞ்சை இடைச்சொருகல் செய்து ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் களங்கப்படுத்தாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement