• Nov 19 2024

“நான் ஒன்றும் வில்லன் இல்லை”…நயன்தாரா பற்றிய சர்ச்சை பதிவிற்கு மன்னிப்பு கேட்ட டாக்டர்-வைரலாகும் பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதாலித்து வந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பல கட்டுப்பாடுகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ரஜினி, அஜித் குடும்பத்தினர், கலா மாஸ்டர், விக்ரம் பிரபு என்று பல பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அத்தோடு திருமணத்தின் புகைப்படங்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வலம் வந்தது.

இந்நிலையில், நடிகை நயன்தாராவை மருத்துவர் ஒருவர் கிண்டலடித்து பதிவிட்டுள்ளதை பாடகி சின்மயி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து கடுமையாக கண்டித்தார். அந்த விடயம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவியது.அந்த மருத்துவர் தனது முகப்புத்தக பக்கத்தில் நயன்தாரா குறித்து பதிவிட்டுள்ள கமெண்ட்டில், ‘நயன்தாராவின் நடிப்பு திறமைக்கு மதிப்பு தருகிறேன். ஆனால் பாட்டி வயசுல (40 வயது) குடும்பம், குழந்தை என அவரின் இந்த முடிவை நினைக்கும்போது சிரிப்பு வருகிறது. அவருக்கு கருத்தரிப்பு மையங்கள் உதவி செய்யும்னு நம்புகிறேன்’ என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

மேலும் அந்த கமெண்ட்டை பார்த்து கடுப்பான பாடகி சின்மயி, மருத்துவக் கல்லூரிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சார்பு குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இது கிடைத்தது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை குறித்து இந்த அற்புதமான மருத்துவர் பதிவிட்ட மோசமான கருத்து” என குறிப்பிட்டு அந்த மருத்துவர் பதிவிட்ட கமெண்ட்டின் ஸ்கிரீன் ஷாட்டையும் ஷேர் செய்தார் சின்மயி.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தற்போது அந்த மருத்துவர் மன்னிப்பு கோரி ஒரு பதிவை போட்டுள்ளார். மேலும் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

சக மருத்துவரும் எனது தோழியான அனுஷா என்பவரிடம் நான் கமெண்ட் மூலம் உரையாடியது நயன்தாரா ரசிகர்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்.மேலும் நான் அவ்வாறு கமெண்ட் செய்ததற்கு ஒரு காரணம் இருக்கின்றது. பெண்களின் கருமுட்டை 30 வயதுக்கு பின்னர் வலுவிழந்துவிடும். நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பின் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக 5 ஆண்டுகள் ஒதுக்கியதை பாராட்டி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

நானும் நயன்தாராவின் ரசிகன் தான். அதனால் தான் அவரது தாமதமான திருமணம் மற்றும் குழந்தை பற்றி பேசினேன். அத்தோடு இந்த கமெண்ட்டை பதிவு செய்ததற்காக நயன்தாரா ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் சின்மயிக்கு ஒரு வேண்டுகோள், ஒரு கமெண்டை வைத்து யாரையும் மதிப்பிடாதீர்கள். நான் ஒன்றும் வில்லன் இல்லை” என அவர் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement