• Sep 20 2024

இயக்குநர் கௌதம் மேனனுக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?- அதுவும் அவர் கிரிக்கெட் வீரரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். காதல் கதையை மையமாக வைத்து படங்களை இயக்குவதில் சிறந்தவராகவே காணப்படுகின்றார்.

அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன.


இவர் இயக்குநர் என்பதையும் தாண்டி இப்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சிம்புவை வைத்து இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி செம வசூல் வேட்டை நடத்தியது. இந்த நிலையில் இவரின் மகன் குறித்த விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது கௌதம் மேனனின் மகன் ஆர்யா யோஹன் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஆடியிருக்கிறார்.

அவர் மிகவும் அர்ப்பணிப்பான மகன், நிறைய பயிற்சிகளும் நிறைய பணிகளும் அதன் பின்னால் உள்ளது என தனது மகன் குறித்து கௌதம் மேனன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement