• Nov 19 2024

நயன்தாரா தன்னுடைய குழந்தைகளுடன் எந்த மொழியில் பேசுவார் தெரியுமா?- அடடே இதை எதிர்பார்க்கலையே

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளை கடந்து இவர் சினிமாவில் நடித்து வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் தமிழில் நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 

பாலிவுட்டிலும் நயன்தாரா தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார். தன்னுடைய அறிமுக படத்திலேயே ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அட்லீ இயக்கியுள்ள நிலையில் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் சில தினங்களிலேயே இணைந்தது. இதையடுத்து பாலிவுட்டில் நயன்தாராவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 


 ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் இணைந்து நயன்தாரா நடித்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி நயன்தாரா, ஜெய், சத்யராஜ் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த அன்னபூரணி படம் வெளியாகியது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில்  இப்படத்தில் நடித்த ப்ரீத்தி என்பவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸியம் பற்றி கூறியிருக்கிறார். அதாவது அன்னபூரணி திரைப்படத்தின் இறுதி சூட்டிங் நாளில் தான் என்னுடைய பிறந்தநாள்,எனக்கு நயன்தாரா மேடமே கேக் வாங்கித் தந்தாங்க.


கேக்கை அவங்களோடையே சேர்ந்து வெட்டினேன். அவங்களே எனக்கு ஊட்டி விட்டாங்க, அதுவே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அத்தோடு அவங்க ஷுட்டிங்ல இருக்கும் போது குழந்தைகளுடன் வீடியோ கோலில் தமிழில் தான் கதைப்பாங்க, மலையாளத்தில பேச மாட்டாங்க அதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கும் என்றும் தெரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement