தமிழ் சினிமா இதுவரை எத்தனையோ பாடகர்களை கண்டுள்ளது, ஆனால் 80 மற்றும் 90களில் இருந்த கலைஞர்களை மட்டும் மறக்கவே முடியாது. காரணம் அந்த காலகட்டத்தில் வந்த பாடல்கள் இப்போது கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றது என்று தான் கூற வேண்டும்.
அப்படி திரையுலகில் நிறைய பாடல்கள் பாடி மக்களை அசத்திய பாடகிகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் மஹதி. விக்ரம் நடித்த சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற ஐய்யயோ ஐய்யயோ பிடிச்சிருக்கு என்ற பாடலைப் பாடியதன் மூலம் அறிமுகமானவர் தான் மஹதி.அந்த பாடல் பட்டிதொட்டி என்றும் ஹிட்டடித்தது.
கர்நாடக இசைக் கலைஞரான இவர் சிறந்த பாடகிக்கான தமிழக அரசு விருதினை 2007ம் ஆண்டு பெற்றிருக்கிறார். சினிமாவில் இதுவரை 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள மஹதி நிறைய இசைக் கச்சேரிகளில் பங்கு பெற்றிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அத்தோடு சிறந்த பாடகியான இவர் 2008ம் ஆண்டு மருத்துவர் ஸ்ரீகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் மஹதி தனது மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதோ பாருங்கள்,
Listen News!