இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் திரையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஒருவராக இருந்து வருகிறார். இவர் தனுஷிற்கென்றே இயக்குநரானார் என்று கூறும் வகையில் தனுஷை வைத்து தொடர்ந்து 4 படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
தனுஷ் பல மேடைகளில் வெற்றிமாறனை பற்றி பாராட்டி பல பேட்டிகளை கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புண்டு என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் சூரி போலீசாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இந்த படம் குறித்து பேட்டி கொடுத்த வெற்றிமாறன் படத்திற்கு வெறும் 4 கோடி தான் பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் தற்போது 40 கோடி வரை எட்டியுள்ளது என்று கூறினார்.
இப்போதைய சூழ் நிலைக்கு 40 கோடி பட்ஜெட் என்றால் மிகப்பெரிய பட்ஜெட் படம் தான். அதில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் போக தினப்படி 500 ரூபாய் கொடுப்பது வழக்கம். ஆனால் விடுதலை படத்தில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு தினப்படியாக வெறும் 100 ரூபாயை கொடுத்திருக்கின்றனர்.
இது வெற்றிமாறனுக்கு தெரியுமா? தெரியாதா? என்ற கேள்விகள் எழுந்தாலும் அதெப்படி தெரியாமல் இருக்கும் என்ற கருத்தும் பரவி வருகிறது. பொது வெளியில் நியாயத்தை பேசும் வெற்றி மாறன் தன் யுனிட்டிற்குள் இப்படி ஒரு அநியாயம் நடந்தும் அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா? என்று பேசி வருகின்றனர்.
Listen News!