• Sep 20 2024

விஷாலுக்கு இது பற்றி கொஞ்சம் கூட தெரியாதா? மற்றவங்க வாழக்கூடாதா?- விளாசித் தள்ளிய காதல் பட நடிகர்

stella / 11 months ago

Advertisement

Listen News!

செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் இதுவரை 34 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்.

இதனை அடுத்து இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய திரைப்படம் தார்க் ஆண்டனி. இத்திரைப்படம் வெளியாகி கெரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் திரைப்படம் இதுவரை 100 கோடி வசூல் செய்தாகவும் கூறப்படுகின்றது.இந்தத் திரைப்படம்  இன்று அமேசான் பிரைம் OTTயில் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், அந்த படத்தின் வெற்றி பிரஸ்மீட்டில் பேசிய விஷால் 4 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு சினிமா பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம், அந்தப் படத்தை டெபாசிட் செய்து வைத்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். 

சினிமாவில் போட்டால் ஒரு பைசா கூட திரும்ப வராது எனக் கூறியிருந்தது பட்ஜெட் தயாரிப்பாளர்களை கடும் மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. பல சிறு தயாரிப்பாளர்கள் தங்கள் பட நிகழ்ச்சிகளின் போது நடிகர் விஷால் பேசிய பேச்சுக்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், காதல் படத்தில் காமெடி நடிகராக நடித்த சுகுமார் தற்பொழுது இது குறித்து பேசியுள்ளார்.


கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னணி நடிகர்களுக்கு 100 கோடி 200 கோடி சம்பளம் கொடுத்து வரும் நிலையில், நலிவடைந்த சினிமா கலைஞர்களுக்கு உதவுவது சிறு பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான் என்றும் நடிகர் விஷாலின் பேச்சைக் கேட்டு சில தயாரிப்பாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி ஓடி விட்டனர். அதனால் நான் உட்பட என் நண்பர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

திமிரு படத்துக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு படம் ஓடிவிட்ட நிலையில், விஷால் திமிராக பேசக்கூடாது என கண்டித்துள்ளார் அவர் பேசிய வீடியோ த பணக்காரர்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும், சாமானியர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள், சினிமாவை நம்பி இங்கு பல லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது விஷாலுக்கு கொஞ்சம் கூட தெரியாதா? என்றும் விளாசியுள்ளார்.


Advertisement

Advertisement