• Nov 14 2024

தலைப்பை பார்த்து ஏமாந்து போகாதீங்க- அயோத்தி படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


 இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் தான் அயோத்தி இப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.இப்படத்தில் இவருடன்  விஜய் டிவி புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் லீட்ரோலில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் அயோத்தி படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் அளித்துள்ளார். அதில் அயோத்தி என்ற தலைப்பை பார்த்ததும், அயோத்தி கிருஷ்ணர் கோவில், அயோத்தி பிரச்சனை என்று நினைத்தால் ஏமாந்துதான் போவீங்க. அயோத்தி படத்தின் கதை என்னவென்றால், கணவன், மனைவி , மகன், மகள் ஆகிய நான்கு பேரும் ராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள்.


இவர்கள் நான்கு பேரும் அயோத்தியில் இருந்து மதுரை வந்து ஒரு காரின் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்கள். ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஏற்படும் விபத்தில் சிக்கி மனைவி இறந்துவிட மீண்டும் உடலை அயோத்திக்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய,கணவர் நினைக்கிறார். ஆனால், அவரின் மூர்க்கத்தனமான கோவத்தால் பல பிரச்சனைகளில் சிக்கி விடுகிறார். இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய முன் வருபவர் தான் சசிக்குமார்.

இறுதியில், மனைவியின் சடலத்துடன் அவர்கள் சொந்த ஊரான அயோத்திக்கு திரும்பிச்சென்றது எப்படி? அதில் ஏற்பட்ட சிக்கல்கள் என்ன? இதுதான் படத்தின் கதை. இந்த படத்திலும் சசிக்குமார் வழக்கம் போல தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் சசிக்குமார், தான் யார் என்பதை சொல்லும் போது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.


குக் வித் கோமாளியில் கலக்கிய புகழ் இந்த படத்திலும் நகைச்சுவையில் கலக்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் புகழ் சசிக்குமாருக்கு உதவி செய்யும் நண்பனான நடித்துள்ளார். ஆக படத்தில் காமெடி காட்சிகள் எதுவுமே இல்லை. நடிகர் புகழ் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் போது இந்த ரோல் தனக்கு சரிபட்டு வருமா என்று கேட்டு தெரிந்து கொண்டு நடிப்பது நல்லது.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை பார்ப்பதற்கு நிறைய பொறுமை தேவை. ஒரு சடலத்தை விமானத்தில் ஏற்றி செல்வதற்கு எவ்வளவு சட்ட சிக்கல்கள் இருக்கின்றன என்பது படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து விமானம் குறித்தே சொல்லப்பட்டதால், படம் பார்க்க கொஞ்சம் பொறுமை வேண்டும். ஆனாலும், கடைசி கிளைமாக்ஸ் காட்சி கைத்தட்டலை பெற்றுவிட்டது.


அயோத்தி படத்தில் காமெடி இல்லை, கதாநாயகனுக்கு ஜோடி இல்லை, டூயட் பாடல் இல்லை, குத்துப்பாட்டு என எந்த பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவுமே இல்லாமல் கதைக்களத்தை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் மந்திர மூர்த்தி. அயோத்தி படத்தை தியேட்டருக்கு சென்று ஒரு முறை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement