தனுஷின் புதுப்பேட்டை திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் விஜய் சேதுபதி. இவர் இதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
இதனைத் தொடர்ந்து பீட்ஷா நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் முக்கியமான நடிகராக வலம் வருகின்றார். இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்திலுக்கின்றார்.
இருப்பினும் தற்பொழுது கதாநாயகனாக மட்டுமல்லாது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் மாஸ்டர் விக்ரம் ஆகிய திரைப்படங்களிலும் சூப்பர் ஹிட்டாக நடித்திருப்பதோடு ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
மேலும் பொதுவாக சினிமாவில் ஹீரோக்களாக இருக்கும் பலர் சிக்ஸ் பேக் உடம்போடு 60 வயது 70 வயதானாலும் தங்களுக்கு பிடித்த உணவை கூட உண்ணாமல் இருக்கும் நிலையில், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆசைப்பட்டால் யோசிக்காம சாப்பிடணும் என நடிகர் விஜய்சேதுபதி சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மனசுக்கு பிடிச்சதை சாப்பிட்டு சந்தோஷமா இருங்க, அதற்கு பிறகு உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்றதை விட்றாதீங்க, நான் அதை பண்றதில்லை. என்னை மாதிரி நீங்களும் இருந்திடாதீங்க என நடிகர் விஜய்சேதுபதி தனக்கே உரிய தக் லைஃப் பதிலை கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ரஜினியின் இரண்டாவது செந்தர்யா இத்தனை திறமை வாய்ந்தவரா?- கிரேஃட் மேடம் நீங்க- குவியும் பாராட்டுக்கள்
- அம்மாவின் திருமணப் புடவையை அணிந்து கியூட்டான வீடியோ வெளியிட்ட அர்ச்சனா மகள் சாரா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!