• Sep 21 2024

லண்டனின் புதுசா சொந்தமாக வீடு வாங்கல-கயவர்களோட வேலை தான் இது- கடும் கோபத்தில் பதிலடி கொடுத்த குஷ்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் குஷ்பு. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருப்பதோடு இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் முக்கியமாகும்.

மேலும் இவர் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து உடல் எடையையும் வெகுவாகக் குறைத்ததோடு சமீப காலமாக லண்டனில் வசித்து வருகிறார்.அத்தோடு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.


மேலும் இவர் சமீப காலமாக லண்டனில் வசித்து வருவதோடு அங்கு எடுக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றார்.அங்கே உள்ள IKEA ஷாப்பிங் மாலுக்கு சென்ற போட்டோக்களையும் தனது புதிய வீட்டில் டீ குடிக்கிறேன் என்ற புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் இவர் புகைப்படங்களைப் பதிவிட்ட நிலையில் குஷ்பு லண்டனில் புதிய வீட்டை வாங்கி விட்டாரா? எனக் கேட்டு வருவதோடு பலர் வாழ்த்தியும் வருகின்றனர்.


இருப்பினும் இவரை சிலர் திட்டி வரும் நிலையில் அதற்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது

புதிய வீடு தான்னு சொன்னேன், புதுசா சொந்தமா வாங்குன வீடுன்னா சொன்னேன். சில கயவர்கள் தவறான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர் என கெட்டவார்த்தைகளில் திட்டித் தீர்த்துள்ளார் நடிகை குஷ்பு. புலம்புவர்கள் புலம்பட்டும் நான் புதுசா வாடகை எடுத்துள்ள வீட்டில் ஹேப்பியா இருக்க போறேன் என பதிலடி கொடுத்துள்ளார்.


ட்ரோல் பண்றவங்களை விட்டுத் தள்ளுங்க மேடம், நாங்க உங்க கூட இருக்கோம்.. லண்டனை என்ஜாய் பண்ணுங்க பேசுறவன் ஆயிரம் பேசிட்டுத் தான் இருப்பான் என நடிகை குஷ்புவுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement