• Sep 21 2024

சேரி என்னு சொல்லாதீங்க பார்த்திபன்.. ப்ளூ சட்டை மாறன் -மறுபடியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இரவின் நிழல் என இயக்குநர் பார்த்திபன் தனது படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், அந்த படம் முதல் படமில்லை. ஈரானிய படமான ஃபிஷ் அண்ட் கேட் படம் தான் முதல் நான் லீனியர் படம் என ப்ளூ சட்டை மாறன் கூறியிருந்தார்.

ஃபிஷ் அண்ட் கேட் படத்தில் எங்கேயும் அந்த படத்தை உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் எனக் குறிப்பிடவில்லையென பார்த்திபன் பதில் அளித்திருந்தார். வெரைட்டி உள்ளிட்ட உலகின் பிரபலமான பத்திரிகைகளில் தெரிவித்துள்ள ஆதாரங்களை எடுத்துப் போட்டு பார்த்திபனுடன் ட்விட்டர் சண்டையை ஆரம்பித்தார் ப்ளூ சட்டை மாறன்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் இரவின் நிழல் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இல்லை என்றும் அந்த படம் ரொம்பவே சுமாரான படம் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்த நிலையில், பார்த்திபனின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், உருவ பொம்மையை எரித்தும் நிகழ்த்திய போராட்டங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

புதுமையான பாராட்டிற்கு நன்றி பார்த்திபன் சார். உங்கள் நாகரீக செயல் தொடரட்டும்." என அந்த புகைப்படங்களை அவரே ஷேர் செய்து ட்வீட் போட்ட நிலையில் அதற்கும் கீழ் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் சிலர், பார்த்திபனின் சர்ச்சைக்குரிய ட்வீட் காரணமாக பார்த்திபனுக்கு எதிராகவும் ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவாகவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இயக்குநர் முகமது இசாக் இயக்கத்தில் உருவான அகடம் திரைப்படம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிங்கிள் ஷாட் திரைப்படம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு 2012ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி மொத்த படமும் எடுத்து முடிக்கப்பட்டது. அதன் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 3 நிமிடங்கள் 30 நொடிகள் என பதிவிட்டு உங்க படத்துக்கு உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இருந்தால் ஏன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாகவும் ஆபாச வசனங்கள் பேசியும் நடித்துள்ள நடிகை பிரிகிடா, சேரி மக்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவாங்க என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அவர் அதற்காக மன்னிப்பு கேட்டார்.

அத்தோடு நானும் மன்னிப்பு கேட்கிறேன் என பார்த்திபன், போட்ட ட்வீட்டிலும் அதே வார்த்தையை பயன்படுத்திய நிலையில், அந்த வார்த்தையை பயன்படுத்தாதீங்க பார்த்திபன் என ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்வீட் போட்டு விளாசித் தள்ளி உள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement