• Sep 20 2024

எதையும் மாற்ற வேண்டாம்- நாக சைதன்யா டாட்டூவை அழிக்காததற்கு இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் பிரபல பாலிவூட் நடிகரான நாகர்ஜுனாவின் மகன் என்பதும் தெரிந்ததே.பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த இவர் தற்பொழுது ஹிந்தியிலும் லால் சிங் சத்தா என்னும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் அமீர்கானின் நண்பனாக, ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .இது ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற பாரஸ்ட் கோம்ப் என்கிற படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் நாளை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது.

தமிழில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், சமீபத்தில் இப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் நாக சைதன்யாவிடம் அவர் கையில் உள்ள டாட்டூ பற்றி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், அது தனது திருமண தேதியை குறிக்கும் டாட்டூ என்றும், அது தெரியாமல் எனது ரசிகர்கள் பலர் அதனை காப்பி அடித்து வருகின்றனர். தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த டாட்டூவை அழிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த நாக சைதன்யா, அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இதுநாள் வரைக்கும் எனக்கு வரவில்லை. எதையும் மாற்ற வேண்டாம், அது அப்படியே இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement