• Nov 10 2024

எனக்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கல- மனம் நெகிழ்ந்து டுவிட் போட்ட மாமன்னன் திரைப்பட ரவீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன்.

இயக்குநர் மாரி செல்வராஜின் அற்புதமான உருவாக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக வாழ்ந்திருந்தார்.


பகத் பாசில் ரத்னவேலு வாக வாழ்ந்து காட்ட உதயநிதி மக்களின் மனசாட்சியின் உருவத்தை தன் பாத்திரம் மூலம் அழகாக பிரதிபலித்தார்.ரசிகர்களிடம் மட்டுமல்லாமல்,  விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுக்களை குவித்தது. 

இந்தப் படத்தில் ரத்னவேலின் மனைவி ஜோதி காரெக்டரில் நடித்தவர் நடிகை ரவீனா. இப்படத்தின் மூலம் இவருக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.இதனால் இவர் பதிவொன்னை போட்டுள்ளார். அதில் இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி" என்று கூறியுள்ளார்.


மேலும் இவர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ்டுடே திரைப்படத்திலும் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement