கடந்த மார்ச் மாதம் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கிய நிலையில், இதில் தமிழகம் முழுவதும் உள்ள 8.17 லட்சம் மாணவர்கள் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று +2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி 8,03,385 தேர்வர்கள் தேர்வு எழுதியதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.03% ஆகும். மாணவர்கள் 91.45%, மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களை விட மாணவிகள் 4.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85% தேர்ச்சி சதவீதத்துடன் விருதநகர் மாவட்டம் முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில் இதில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கும் விதமாக விஷால் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்றும் தோல்விகள் வாழ்க்கையில் இயல்பு தான். ஆகையால் எந்த விதத்திலும் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து படித்து, மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், அன்பான சொந்தங்களுக்கும் வணக்கம். வருடம்தோறும் பிளஸ்+2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு படிக்க இயலாத வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளை விஷால் அவர்கள் தனது 'தேவி அறக்கட்டளை' மூலம் படிக்கவைத்து வருகிறார். அதேபோன்று இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களின் பதிவு நடைபெற்று வருகிறது.
நமது மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பிளஸ்+2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி, தேர்ச்சி பெற்று மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ, மாணவிகள் குறித்த முழு விபரங்களையும் நமது 'தேவி அறக்கட்டளை' மின்னஞ்சல் devifoundationchennai@gmail.com முகவரிக்கு அனுப்புங்கள். அவர்களின் மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு, அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிகள் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே விஷால் தன்னுடைய அம்மா பெயரில் இயங்கி வரும் தேவி அறக்கட்டளை மூலம் ஏழை - எளிய மாணவ, மாணவிகளை படிக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!