• Sep 20 2024

காதலை மறைத்து விட்டு கண்ணீர் விட்டு தவிக்காதே- லாஸ்லியா கொடுத்த ரியாக்ஷன்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கவின்.இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு புகழ் உச்சிக்கே சென்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இவர் சக போட்டியாளர் லாஸ்லியாவை காதலித்து வந்தது போன்று தான் பேசிக் கொண்டிருந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.


இந்நிலையில் கவின் நீண்ட நாள் தோழியாக இருந்த மோனிகாவை வருகின்ற 20ம் தேதி திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு நெஞ்சமெல்லாம் காதல் என்கிற பாடலை ஒலிக்க விட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் கவினின் திருமணத்திற்கு லாஸ்லியா ரியாக்ஷன் இது தானா? என்று கேட்டிருந்தனர்.

இந்த நிலையில் லாஸ்லியா தற்பொழுது ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் ஜீம்பலக்கா ஜீம்பலக்கா பாடலை ஒலிக்கவிட்டிருப்பதோடு அதற்காக அவர் கம்பீரமாக நடந்து வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement