• Nov 14 2024

வெளிய சொல்லாதீங்க, ஐஸ்வர்யா வீட்டு திருட்டு சம்பவத்தில் திடீர் திருப்பம்... கைதான ஈஸ்வரி பரபரப்பு தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் ஐஸ்வர்யா வசித்து வருகின்றார். இவரின் லாக்கரில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைரம், நவரத்தின கற்கள், தங்க நகைகள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.அத்தோடு  அதில், 2019 ஆம் ஆண்டு தன்னுடைய தங்கை சௌந்தர்யா திருமணத்தில் நகையை போட்டிருந்தேன். அதற்கு பிறகு தனி லாக்கரில் அந்த நகைகளை வைத்தேன். அதை நான் திறந்து கூட பார்க்கவில்லை

ஆழ்வார்ப்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலை, சிஐடி நகர், போயஸ் கார்டன் என மூன்று வீடுகளில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டு இருந்தது. மேலும், நெக்லஸ்கள், ஆரம் வைர நகைகள் உள்ளிட்ட 3 கோடி ரூபாய் நகைகள் திருட்டுப் போய்  உள்ளது.அப்போது ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி இருந்த ஈஸ்வரி என்பவர் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.

இதனால் போலீஸ் மந்தவெளி பகுதியில் இருந்த ஈஸ்வரி மற்றும் அவருடைய கணவர் அங்கமுத்து இருவரை பிடித்து விசாரணை நடத்தி இருக்கிறது. விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாவது, ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்களுடன் நான் வேலை பார்த்து வந்தேன். நகை இருக்கும் லாக்கரின் சாவியை ஐஸ்வர்யா எங்கு வைப்பார் என்பது எனக்கு தெரியும். அத்தோடு முதலில் கொஞ்சம் நகைகளை தான் லாக்கரில் இருந்து திருடினேன். இதை ஐஸ்வர்யா வீட்டில் யாருமே கவனிக்கவில்லை.


இதனை தொடர்ந்து கார் ஓட்டுனர் வெங்கடேசன் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக லாக்கரில் இருந்து நகைகளை எல்லாம் திருடினேன்.இது நான்கு ஆண்டுகளாக தொடர்ந்தது. இதற்கிடையில் வங்கியில் கடன் வாங்கி சோளிங்கநல்லூரில் 95 லட்சத்துக்கு வீடு வாங்கினேன். அந்த கடனை இரண்டு ஆண்டுகளிலேயே அடைத்து விட்டேன். இதன் பின் ஆறு மாதங்களுக்கு முன்பே நான் வேலையை விட்டு நின்று விட்டேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து போலீசார் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடம் இருந்து சுமார் 100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், வீட்டு பத்திரத்தை பறிமுதல் செய்து இருக்கின்றனர்.அத்தோடு, ஈஸ்வரியின் கணவர் ’இவ்வளவு பணம் ஏது’ என்று கேட்டபோது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வீடு, நகைகள் வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு தான் இது நமது வீடு உண்மையில் இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமான வீடு என்றும் தனது கணவரிடம் பொய் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


அத்தோடு  திருடிய பணத்தில் மகளுக்கு திருமணம் செய்து வைத்தது, கணவருக்கு காய்கறி மற்றும் மளிகை கடை வைத்து கொடுத்தது உள்பட பல செலவுகளை ஈஸ்வரி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 18 வருடமாக வேலை பார்க்கும் ஈஸ்வரி கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி உள்ளதாகவும் அதுமட்டுமின்றி இவர் தான் தனுஷ் வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை எடுத்து செல்வார் என்றும், அதுவும் தனது கணவரின் காய்கறி கடையில் இருந்து தான் எடுத்துச் செல்வார் என்றும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement