ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ படத்தில், , த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ் மற்றும் மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் முதல் நாளிலேயே 148.5 கோடி வசூலை அள்ளியதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தாலும், படம் 1000 கோடி வசூல் செய்ய வாய்ப்பில்லை என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
அப்போதும், படம் ஐந்தாவது நாளில் 500 கோடியை எட்டிவிடும் என்றும் 10வது நாளில் ஆயிரம் கோடியை எட்டிவிடும் என்று இணையத்தில் செய்திகள் பரவியது. இந்த நிலையில் இப்படம் வெளியாவதற்கு முதல் ஜெயிலர் பட வசூலை லியோ முந்தாது. அப்படி முந்தினால் நான் என் மீசையை எடுத்து கொள்கிறேன் என சவால் விட்டிருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.
இதனை அடுத்து தற்பொழுது அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அதில், லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான கைதி, மாஸ்டர் படங்களில் பல விஷயங்கள் மிஸ்ஸிங். அது படம் போகும் வேகத்தில் தெரியாது. இதனால், தான் ரஜினி படத்தோடு விஜய் படத்தை கம்பேர் செய்யாதீர்கள் என்று சொன்னேன்.
ஜெயிலர் படத்திற்கு அனைத்து தரப்பு வயதினரும் வந்தார்கள் அதே போல சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெயிலர் படம் 6.50 கோடி வசூல் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதை வைத்துத்தான் லியோ அவ்வளவு வசூரை எட்டாது என்று சொன்னேன். அப்போது,சவால் விடுங்க என்று ஒரு யூடியூபர் சொன்னதால், நான் மீசையை எடுத்துக்கொள்கிறேன் என்றேன். அதன் பிறகு என் மகள் ஏன் இப்படி பேசுறீங்க என்று திட்டினார். நான் விஜய் சாருடன் பல திரைப்படத்தில் நடித்து இருக்கிறேன். இதற்காக நான் ரஜினி சாருக்கு சோம்பு தூக்கவில்லை.உண்மையை பேசுகிறேன்.
நான் மீசையை எடுத்துவிடுகிறேன் என்று சொன்னதும், பலர் என்னை மோசமாக விமர்சித்தார்கள். விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர், அவரின் மீசை எடுக்கக்கூடாது, அவரின் விரலை வெட்டவேண்டும் என்று சொல்கிறார், நான் ஒரு சினிமா காரன் என்னிடம் இழப்பதற்கு ஒன்னுமே இல்லை. 10 நாளில் ஆயிரம் கோடியா? லியோ முதல் நாள் ரூ148 கோடினு சொன்னாங்க 10 வது நாளில் ஆயிரம் கோடினு சொல்லுவாங்க என்று சொன்னேன் அதே போலத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் எதையும் அதிகாரப்பூர்வமாக அவர்கள் இதுவரை அறிவிக்க வில்லை. இன்னும் இரண்டு நாளில் லியோ மொத்த வசூல் என்ன என்பது தெரிந்து விடும் என்று மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Listen News!