• Nov 14 2024

அப்படியெல்லாம் சொல்லாதீங்க- எதுக்கு பிரிச்சுப் பேசுறீங்க- காரசாரமான பதிலடி கொடுத்த பிருந்தா மாஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பெண் நடன இயக்குநராக வலம் வருபவர் தான் கலா மாஸ்டர். இவர் சந்திரமுகி உட்பட பல திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இவரைப் போலவே இவருடைய சகோதரியான பிருந்தா மாஸ்டரும் தமிழ் சினிமாவின் முக்கிய நடன இயக்குநராக வலம் வருகின்றார்.

இவர் ஆதி, தீபாவளி, சர்கார், ஹே சினாமிகா, டான், பொன்னியின் செல்வன் எனப் பல படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருக்கின்றார். இது தவிர ஹே சினேமிகா என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான், அதிதி பாலன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர்.


காதலை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் ரசிகர்களைப் பெரிதாக கவரவில்லை.இதனை அடுத்தும் படங்களை இயக்கும் பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பெண் இயக்குநர் என்று சொல்லாதீங்க. மனைவி மகள் என்றால் அது ஒரு அடையாளம் இருக்கு. இது இயக்குநர் என்றால் எல்லாம் ஒன்று தான். ஏன் தேவையில்லாமல் பிரிச்சுப் பார்க்கிறீங்க என்று கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement