• Nov 17 2024

போதைப் பொருள் உபயோகிப்பதில் வீரத்தை காட்டாதீங்க - கடுப்பாகி அட்வைஸ்ட் பண்ணிய கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் கார்த்தி. இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டையும் பெற்றிருந்தது. இதனை அடுத்து ஜப்பான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

நடிப்பைத் தாண்டி சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். குறிப்பாக  விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவும் விதத்தில், 'விவசாயி' என்கிற அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும், விவசாயிகள் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவது மட்டும் இன்றி, விவாசாயிகளை கௌரவிக்கும் விதமாக விழாக்களும் முன்னெடுக்க படுகிறது.


இதை தொடர்ந்து தற்போது காவல் துறை சார்பில் நடைபெற்ற போதை பொருளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். மெரினா கடற்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது, ”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.

பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். 


மாற்றத்தை கொண்டு வர முடியும். இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்” என கார்த்தி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement