தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் 'விக்ரம் வேதா'. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்ததோடு , சசிகாந்த் தயாரித்திருந்தார். இப்படத்தை புஷ்கர், காயத்ரி இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.
இதனால் இப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்குகின்றனர்.
விக்ரம் வேதா’ஹிந்தி ரீமேக்கில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக சயிஃப் அலிகானும் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்த படக்குழு செப்டம்பர் 30 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி படப்பிடிப்பை உத்தரப்பிரதேசத்தில் நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் ஹ்ரித்திக் ரோஷன் உத்தரப்பிரதேசத்திற்கு வர மறுத்ததாகவும் தகவல் வெளியாகியது. இதனால் துபாயில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தியதால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதனை மறுத்துள்ள படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "‘விக்ரம் வேதா’ படப்பிடிப்பு தொடர்பாக பரவிய செய்திகள் போலியானவை. இப்படம் இந்தியாவில் லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் தான் அதிகளவில் படமாக்கப்பட்டுள்ளது. விக்ரம் வேதா படத்தின் ஒரு பகுதி மட்டும், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் அமீரகத்தில் படமாக்கப்பட்டது. ஏனென்றால் அங்கு தான் பயோ பபுளுடன் பணியாட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தும் சூழலுக்கு அனுமதி கிடைத்து. அத்துடன் படக்குழுவினரின் உடல் நலம் கருதியும் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது" என அதில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
பிற செய்திகள்
- நயன்தாராவுக்கு நடிகர் ஆர்யா வைத்த செல்லப் பெயர் என்ன தெரியுமா?- அட இது வரை தெரியாமல் போச்சே
- பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் நடித்துள்ள அருண் விஜய்
- பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரமின் புதிய லுக் போஸ்டர் ரிலீஸ்- அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!