விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்த சீரியலில் மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி தான். இதற்கு முன்னர் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் சேர்த்தது 'பாக்கியலட்சுமி' சீரியலில் இவர் நடித்த கோபி கதாபாத்திரம் தான்.
இவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் எதையாவது தகவல்களை சொல்லி வீடியோவாக வெளியிட்டு வருவார். இந்நிலையில் இன்றைய வீடியோவில் தனது நடிப்பு திறமைக்கான ரகசியத்தை கோபி தெரிவித்துள்ளார்.
அதாவது அதில் அவர் கூறுகையில் "நான் ஒரு ரகசியத்தை சொல்ல போறேன், யாருக்கும் சொல்லாதீங்க, நான் நல்லா நடிக்கிறதுக்கு ஒரே காரணம் நீங்க கொடுக்கிற அன்பும் ஆதரவும் தான் யார்கிட்டயும் இத சொல்லிடாதீங்க" என கூறியுள்ளார்.
இவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!