சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் இசைவெளியீட்ட விழாவானது நேற்றைய தினம் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டுவிழாவில், சிறப்பு விருந்தினராக உலகநாயகன் கமலஹாசன் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். இந்த விழாவில் பேசிய சிம்பு, நான் ஹெலிகாப்டரில் வந்ததாக சொல்றாங்க, நான் ஹெலிகாப்டரில் வரவில்லை என் காரில் தான் வந்தேன். நான் பெங்களூர் அல்லது வேறு ஊரில் இருந்து இருந்தால் ஹெலிகாப்டரில் வந்து இருப்பேன் ஆனால், வீட்டில் சென்னையில் இருந்து வர எதுக்கு ஹெலிகாப்டருனு வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய சிம்பு, போன மேடையில் மாநாடு இசைவெளியீட்டு விழாவில் அழுதேன், அதேபோல இந்த மேடையிலும் அழுவீங்களா? என்று சிலர் கேட்டாங்க, அப்படி எல்லா மேடையிலும் அழுகிற பழக்கம் எனக்கு இல்லை. அப்போ இருந்த சூழ்நிலை வேறு, இப்போது இருக்கும் சூழ்நிலை வேறு.
பெற்றோர்கள் பசங்கள கல்யாணம் கல்யாணம் என்று டார்ச்சர் பண்ணாதீங்க, திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகளை நாம பார்க்கிறோம். நமக்கும் மேல ஒருத்தர் இருக்காரு சரியான நேரத்துல எல்லாத்தையும் செய்வார் பாக்கலாம் என்றார். மேலும், என்னை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு நன்றி, அப்பா அம்மாவை யாரும் கை விடாதீங்க என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!