• Nov 14 2024

நீங்க லவ் பண்றதுக்கு வேற இடமே கிடைக்கலையா?- தேவையானியின் கணவரைத் தாக்கிப் பேசிய சரத்குமார்- எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொள்வது அதிகமாகவே காணப்படுகின்றது.அதிலும் இயக்குநர் நடிகையை காதலித்து திருமணம் செய்வது என்பது தமிழ் சினிமாவில் பல முறை நடந்துள்ளது.

அப்படியான ஒரு காதல் கதையை கொண்ட நடிகை தான் தேவயானி. இவர் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் என்பதோடு முன்னணி நடிகர்கள் அனைவரினதும் படங்களிலும் நடித்திருக்கின்றார் என்பதும் முக்கியமாகும். இவர் நடித்த படங்களில் அவரை பெரும் உச்சிக்கு கொண்டு சென்ற திரைப்படம் சூர்ய வம்சம்.


அதே சமயத்தில்தான் நடிகர் விக்ரம் சேது திரைப்படத்தில் நடித்து பிரபலமாக இருந்தார். எனவே இவர்கள் இருவரையும் வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்கலாம் என்று நினைத்த இயக்குநர் ராஜகுமாரன் அவர்கள் இருவரையும் வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற திரைப்படத்தை இயக்கினார். கூடுதலாக இந்த திரைப்படத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை இயக்கும் பொழுதுதான் இயக்குநர் ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பில் படத்தை கூட ஒழுங்காக எடுக்காமல் எப்போதும் தேவயானியை அழைத்து கொண்டு தனியாக சென்று அவர்களை மட்டும் போட்டோ எடுப்பதை வேலையாக் கொண்டிருந்தார் இயக்குநர் ராஜகுமாரன்.


ஒரு நாள் இப்படியே செய்து கொண்டிருந்ததால் காலையிலிருந்து மதியம் வரை படப்பிடிப்பே நடக்கவில்லை. இதனால் காத்திருந்து காத்திருந்து கடுப்பாகி விட்டனர் விக்ரமும் சரத்குமாரும், இந்த நிலையில் இயக்குநரை அழைத்த சரத்குமார் காதல் பண்றதுக்கு படப்பிடிப்பு தளம்தான் உங்களுக்கு கிடைத்ததா? என சத்தம் போட துவங்கியுள்ளார்.


இதை பார்த்த தேவயானி இயக்குநருக்கு சப்போர்ட் செய்து கொண்டு பேச தொடங்கியுள்ளார். ராஜகுமாரனுக்கு அப்போதுதான் தேவயானியும் தன்னை காதலிக்கிறார் என்கிற விஷயம் தெரிந்துள்ளது. இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement