• Nov 19 2024

மௌனம் பேசியதே உனக்கு அது தெரியலையா.! பிக்பாஸ் வீட்டில் செம கியூட்டா பாடிய பிரதீப்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

அதன்படி, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளவர் தான் நடிகர் பிரதீப் ஆண்டனி. இவர் சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். சினிமா துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் 2016ஆம் ஆண்டு அருவி திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின், 2021ஆம் ஆண்டு வாழ் திரைப்படத்தில் நாயகனாக நடித்து அனைவராலும் கவரப்பட்டார்.  


இவரின் ஆசையே சினிமாவில் தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்பது தான். அதனை மையமாக கொண்டு பிக்பாஸில் இணைந்தார். இவர் தொடர்பில் நல்ல கருத்துக்கள் மட்டுமின்றி பல வேறுபட்ட கருத்துக்களும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

இவ்வாறான நிலையில், பிக்பாஸ்  வீட்டிலிருக்கும் பிரதீப், 'மௌனம் பேசியதே' படத்தின் பாடலொன்றை பாடி அனைவரையும் கவர்ந்து விட்டார். 

இதேவேளை, இவரின் சினிமாதுறை மீது கொண்டுள்ள ஆசைகள் நிறைவேறி மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement