• Sep 21 2024

தளபதி விஜய்யின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபிள் சர்ப்ரைஸ்- வேற லெவல் அப்டேட்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விறுவிறுப்பபாக நடந்த வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் குறித்தும் அடிக்கடி தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. அத்தோடு இப்படத்தின் டைட்டில் ஆனது தளபதி விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் மீண்டம் கூட்டணி அமைக்கவுள்ளார். அதன்படி விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் தான் இயக்கவுள்ளார்.

அதன்படி தளபதி 67 படத்தின் அறிவிப்பும் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் ஈடுபட்டுள்ளார். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement