விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிந்த கனா காணும் காலங்கள் என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் நிஷா.
இதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மகாபாரதம். தலையனை பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை என பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.
மேலும் இவருக்கு கணேஷ் என்ற நடிகருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனால் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார்.
இறுதியாக 2020ம் ஆண்டு திருமகள் தொடரில் சின்ன வேடத்தில் நடித்தார் அவ்வளவு தான். இந்த நிலையில் தற்போது அவர் ஷு தமிழில் மிகவும் ஹிட்டாக ஓடும் சீரியலான செம்பருத்தி தொடரில் வக்கீலாக நடிக்க இருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் நிஷாவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!