• Sep 20 2024

மீண்டும் லீக்கானது வாரிசு படத்தின் டூயட் கிளிக்..குழம்பித்தவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் 66வது படம் தான் வாரிசு.இப்படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி இயக்குகின்றார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், காமெடியுடன் குடும்ப சென்டிமெண்டை பிரதானமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகின்றது.

மேலும் பொங்கல் ரிலீசை மையமாக வைத்து இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடைபெற்று வருகின்றது.மேலும்  இந்தப் படத்தின் சீன்கள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளன.

தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு இந்தப் படம் சூட்டிங் துவங்கப்பட்டதில் இருந்தே பெரிய பிரச்சினையை சந்தித்து வருகின்றது. படத்தின் காட்சிகள் பல அடுத்தடுத்து லீக்காகி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.

சென்னையில் விஜய், ராஷ்மிகா, குஷ்பூ உள்ளிட்டவர்கள் இடம்பெற்ற காட்சிகள் லீக்கானது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட போதிலும் காட்சிகள், வீடியோக்கள் தொடர்ந்து லீக்காகி வருகிறது. தற்போது விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் இரண்டு காட்சிகளின் வீடியோக்கள் வெளியாகின.

முதல் வீடியோவில் ஷாம் மற்றும் விஜய்யின் சண்டை காட்சிகளும், இரண்டாவது வீடியோவில் பிரபு, சரத்குமார் மற்றும் விஜய் இடம்பெற்ற மருத்துவமனை காட்சிகளும் வெளியாகின. எனினும் இந்நிலையில் தற்போது மீண்டும் பாடலின் டூயட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.



அத்தோடு இந்தப் புகைப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் சிவப்பு நிற உடையில் டூயட் பாடி வருகின்றனர்.இதனைத்  தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து படக்குழுவினர் மிகுந்த சிரத்தையுடன் தேடி வருகின்றனர். பாதுகாப்பு பலப்படுத்தப்படும் நிலையிலும் இதுபோன்ற லீக் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement