• Nov 17 2024

துல்கர் சல்மான், பிரசன்னா மிரட்டும்... 'கிங் ஆஃப் கொத்தா' படத்தின் திரைவிமர்சனம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கொத்தா’. துல்கர் சல்மானுடன் இணைந்து இப்படத்தில் ரித்திகா சிங், ஐஸ்வர்யா லட்சுமி, அனிகா சுரேந்தர்,ஷபீர் எனப் பலரும் நடித்துள்ளனர். 

இப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் ஆங்கிலேயர்களின் காலத்தில் குற்றவாளிகளை கொடூரமாக சுட்டுத்தள்ளி தண்டனை வழங்கும் இடமாக கொத்தா காணப்படுகின்றது. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் பின்னர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அங்கு குடிபெயர்கிறார்கள். மேலும் குற்றவாளிகளை தண்டிக்கும் இடமாக இருந்த கொத்தா இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளின் சாம்ராஜ்யமாக மாறுகிறது. 

அதாவது குறித்த இடம் போதைப் பொருள் வியாபாரம் செய்யும் கண்ணன் பாய் (ஷபீர்) என்கிற ரவுடியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது. அந்த சமயத்தில் கொத்தாவிற்கு புதிய காவல் அதிகாரியாக இஸ்மாயில் (பிரசன்னா) பதவியேற்க வருகிறார். அங்கு கண்ணன் பாய் செய்யும் அராஜகங்கள், கொடுமைகள் பற்றித் தெரிந்துகொள்கிறார் பிரசன்னா.

அதுமட்டுமல்லாது கண்ணன் பாய் பயப்படும் ஒரே ஆளான ராஜுவைப் (துல்கர் சல்மான்) பற்றியும் அறிந்து கொள்கின்றார். இதனையடுத்து ராஜுவின் பிளாஷ்பேக் காட்சி இடம்பெறுகிறது. அதில் பல வருட காலமாக சினிமாக்களின் டெம்பிளெட் ஹீரோயிசம் செய்யும் கதாநாயகனாக துல்கர் சல்மான் காட்டப்படுகின்றார். 

அந்தக் காலத்தில் எல்லா ரவுடித்தனங்களையம் செய்யும் மோசமான ஆளான ராஜு தனது காதலிக்காக போதைப்பொருள் விற்பதை நிறுத்திக் கொள்கின்றான். ஆனால் தனது காதலி மற்றும் நண்பன் ஆகிய இருவராலும் ஒரே நேரத்தில் ஏமாற்றப்பட்ட ராஜு பின்னர் அந்த ஊரை விட்டு செல்கிறான். அவ்வாறு அந்த ஊரை விட்டு வெளியேறிய ராஜு, இப்போது மிகப்பெரிய ரவுடியாக இருக்கும் கண்ணன் பாயை அழிக்க திட்டமிட்டு மீண்டும் ராஜு பாயை கொத்தாவிற்கு இஸ்மாயில் ஆகிய பிரசன்னா வரவைக்கிறார் . 

இதனைத் தொடர்ந்து மீண்டும் கொத்தாவிற்கு வந்த ராஜு பாய், கொத்தாவின் அரசனாகிறானா இல்லையா போன்ற கேள்விகளுக்குப் பதிலாக இப்படத்தினுடைய மீதிக்கதை அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு, கதை எப்படி..? 

இப்படத்திலும் வழக்கமான ஒரு கேங்ஸ்டர் கதையில் ஏதாவது புதுமையான ஒன்றை நடிகர் துல்கர் சல்மான் செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பை இப்படம் உடைத்தெறிந்திருக்கின்றது. 

அதேபோன்று தொடக்கத்தில் வரும் மசாலா பாடலும் வழமையைப் போல எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. 

மேலும்  எத்தனை பேர் வந்தாலும் அசராமல் அடிக்கக் கூடிய ஒரு ஹீரோவாக மட்டுமே துல்கரின் கதாபாத்திரம் இப்படத்தில் சித்தரித்துக் காடடப்படுகின்றது.


குறை, நிறை 

ஆரம்பத்தில் விறுவிறுப்பான ஒரு கதையை பார்க்கப்போகிறோம் என்ற ரசிகர்களின் ஆர்வம் ஆனது பின்னர் குறைவடைகின்றது, அதாவது படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வெறும் நாயக வழிபாடு மட்டுமே இருக்கிறது. 

ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு ஸ்லோமோஷன் கொடுத்து அளவுக்கதிகமான ஸ்லோ மோஷனில் படத்தை ஒப்பேத்தி ரசிகர்களை கடுப்பேத்தியுள்ளனர்.

மேலும் இரு நண்பர்களுக்கு இடையிலான மோதலை மட்டுமே மையமாக வைத்து நகரும் படத்தின் உடைய கதையானது பின்னர் இரண்டாவது பாதியில் எல்லா கதாபாத்திரங்களும் ஓரங்கட்டப் பட்டு மாஸ் காட்டுகிறேன் என்ற எண்ணத்தில் படத்தை நகர்த்த கதை என்று ஒன்று தேவை என்பதையு மறந்துவிட்டார்கள் என்பது போல் தெரிகிறது.

இருப்பினும் படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாகவே தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இருப்பினும் பிரசன்னா, துல்கர் சல்மான் இன்னும் கொஞ்சம் கம்பீரமாக காட்டப்பட்டிருக்கலாம்.

தொகுப்பு 

எனவே மொத்தத்தில் இப்படம் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லாவிட்டாலும், பொறுமை இருப்பவர்கள் தியேட்டரிற்குச் சென்று பார்க்கலாம்,

Advertisement

Advertisement