தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் துல்கர் சல்மான். மலையாள நடிகரான இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். ரஷ்மிகா மந்தானா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்குகிறார். இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இந்த படத்தின் புதிய கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை பூமிகா சாவ்லா மிருணாளினி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விஷ்ணு சர்மாவின் மனைவி என்ற துணைப்பெயருடன் இந்த கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- வாவ் என்ன ஒரு அழகு -பிரான்ஸ் நாட்டின் முக்கிய இடத்திலிருந்து ப்ரியங்கா மோகன் வெளியிட்ட லேட்டஸ்டான போட்டோ
- சிம்புவைக் காதலிப்பது உண்மை தான் அம்மாவுக்கு 1 கோடி ஜெயிச்சுக் கொடுக்கணும்- நடிகை ஸ்ரீநிதியின் பரபரப்பான பேட்டி
- “இனி நான் அவனுக்கு போன் பண்ண மாட்டேன்”…காதலனால் விமான நிலையத்தில் நின்று அழுத பிரபல நடிகை
- அச்சு அசல் ரஜினிகாந்த் போலவே இருந்த நடிகர்…அவர் யாரு..கடைசியில அவர் நிலைமை என்னாச்சு தெரியுமா..?
- இந்தப் பிரபல நடிகரும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகின்றாரா?…வெளியாகிய தகவல்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!