• Sep 20 2024

ஆக்‌ஷன் ஹீரோவாக துல்கர் சல்மான் மிரட்டிய கிங் ஆஃப் கொத்தா படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கிங் ஆஃப் கொத்தா. இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 இப்படத்தில் துல்கர் சல்மான் உடன் ஷபீர், பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் உருவான இப்படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். 


ஓணம் பண்டிகையை முன்னிட்டு இப்படம் கடந்த 24ம் தேதி வெளியாகியது.அத்தோடு இத்திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்திருப்பதாகவும் கலவையான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இரண்டு நாட்களில்  ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இது வசூலில் அள்ளிக் குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement