• Sep 20 2024

மாரிமுத்துவால் டம்மியான எதிர்நீச்சல்! சன் டிவியில் நாளாந்தம் குறைவடையும் டிஆர்பி ரேட்டிங்..!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருந்த சீரியல் தான் எதிர்நீச்சல். தற்போது குணசேகரன் கேரக்டருக்கு வேலராமமூர்த்தி மாஸ் என்ட்ரி கொடுத்து நடித்து வந்திருக்கிறார்.

இவருக்கான வரவேற்பு எல்லாம் பலமாகத்தான் இருந்தது. ஆனால் போகப் போக ஒவ்வொரு நாளும் புது குணசேகரனின் நடவடிக்கைகள், பேச்சு, அடாவடித்தனமான வன்மம் இது எல்லாம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்து எரிச்சல் அடைய வைத்து வருகிறது. 

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடர் தான் ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பான தொடர் ஆகும்.

எனினும், சன் டிவியில் டிஆர்பி கிங் ஆக திகழ்ந்து வந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது டம்மி ஆனதால், புது சீரியல் ஒன்றை சன் டிவி களமிறக்கி உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் பெரும் அளவுக்கு மாஸான வரவேற்பை பெற்றதற்கு காரணம், ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான். அவரின் நடிப்பு, டயலொக் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனினும் அவர் மாரடைப்பு காரணமாக அண்மையில் தான் இறந்தார்

இவரது இறப்பு எதிர்நீச்சல் சீரியலுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.அவரின் மறைவுக்கு பின், வேல ராமமூர்த்தியை ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க வைத்தனர். 

எனினும், அவரின் நடிப்பு எடுபடாததால் அவரது கேரக்டரை அப்படியே டம்மி ஆக்கிவிட்டனர். திரைக்கதை பல்வேறு மாற்றங்கள் செய்தும் எதிர்நீச்சலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. டிஆர்பியும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணமுள்ளது.

இந்த நிலையில், டிஆர்பி-க்காக எதிர்நீச்சலை மட்டும் நம்பி இருக்காமல் புதிய தொடர் ஒன்றை களமிறக்குகிறது சன் டிவி.  இதன்மூலம் டிஆர்பி ரேட்டிங்கை புதிய சீரியல் எகிற வைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement